மாணவனை அடித்து நொறுக்கிய ஆசிரியர் மீது வழக்கு பதிவு

ரேவா,:மத்திய பிரதேசத்தில், எட்டாம் வகுப்பு மாணவனை அடித்து காயப்படுத்திய ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ரேவா மாவட்டத்தின் கஜுஹா காலா என்ற கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது.

சமீபத்தில் இப்பள்ளி ஆசிரியர் சந்தீப் பார்த்தி, எட்டாம் வகுப்பு மாணவனை அடித்து நொறுக்கும் ‘வீடியோ’ வேகமாகப் பரவியது. இந்த வீடியோ பதிவில், மாணவரின் கன்னத்தில் அறையும் ஆசிரியர், பின் தொடர்ந்து தாக்குகிறார். இதில், மாணவனுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ”ஆசிரியர் எதற்காக மாணவனை அடித்தார் என விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என, ரேவா எஸ்.பி., நவ்நீத் பாசின் தெரிவித்தார்.சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் பாடத்தை தவறாக எழுதியதற்காக, ஆசிரியர் அடித்ததில் மாணவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.