டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,947 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்றுகாலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக மேலும் 3,947 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 39,583 ஆக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,096 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,40,19,095 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 18 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,629 பேர் ஆக உள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 2,18,52,16,710 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.நேற்று ஒரே நாளில் 34,21,962 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.