தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை அதிகரிக்கும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.

2022 செப்டம்பர்30ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2022 செப்டம்பர்30ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

இன்றும் அடுத்த சில நாட்களிலும் நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் மேல்மற்றும்சப்ரகமுவமாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமேல் மாகாணத்தில் பல தடவைகள்மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவாமாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம்காணப்படுகின்றது.

மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுப்பகுதிகளிலும் வடக்கு,வடமத்தியமற்றும்தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரைவேகத்தில் பலத்தகாற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.