சில்லறைய மாத்துறோம்.. சீக்கிரமா கொடுக்குறோம்.. துரைமுருகன் 'லகலக'..!

“குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம்; விரைவில் வழங்குவோம்” என, அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே 40 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர் பேசிய அவர், “தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மு.க.ஸ்டாலினுடைய ஆட்சி மக்களோடு மக்களாக இருந்து தொண்டு செய்யும் ஆட்சி. அதன்படி நாங்கள் செய்து வருகிறோம்.

கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம். விரைவில் திட்டத்தை தொடங்கி, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.