மக்களே முக்கிய தகவல்..!! உங்க பெயரில் போலி சிம் கார்டு இருக்கா? கண்டுபிடிப்பது, நீக்குவது எப்படி?

சிம் கார்டு வாங்குவதற்கும் ஆதார் அட்டை, ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. ஆதாரை ஆவணமாக வைத்தே சிம்கார்டுகளும் வழங்கப்படுவதால், ஒரு ஆதாரில் எத்தனை சிம்கார்டுகள் வாங்கலாம்? போலி சிம் கார்டுகள் வாங்கப்பட்டிருந்தால் தெரிந்து கொள்வது எப்படி? போலி சிம் கார்டுகளை நீக்குவது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்வோம்.

  • முதலில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் இணையதளமான tafcop.dgtelecom.gov.in பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
  • அதில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
  • இதன்பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பபடும்.
  • மொபைல் எண்ணுக்கு வந்த ஓடிபியை அங்கு உள்ளிட வேண்டும்.
  • இப்போது உங்கள் ஆதார் கொண்டு வாங்கப்பட்ட மொபைல் எண்கள் காண்பிக்கப்படும்.
  • ஒருவேளை நீங்கள் வாங்காத மொபைல் எண் அதில் இருந்தால், நீக்கவும் கோரலாம்.

ஒரு நபரின் ஆதார் கார்டு கொண்டுஅதிகபட்சமாக 9 மொபைல் எண்கள் வாங்கிக் கொள்ள முடியும். அவற்றில் நீங்கள் வாங்காத மொபைல் எண்கள், உங்கள் ஆதாரைக் கொண்டு வாங்கப்பட்டிருந்தால் ரிப்போர்ட் செய்து பிளாக் செய்ய முடியும். அதற்கான வழிமுறைகளும் tafcop இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் இணையதளம் வாயிலாக உங்க பெயரில் உள்ள போலி சிம் கார்டுகளை கண்டறிந்து எளிமையாக நீக்கிக் கொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.