எடப்பாடி செஞ்ச பெரிய தவறு… பொன்னியின் செல்வனாக மாறிய ஓபிஎஸ்!

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில்

மேல்முறையீடு செய்திருந்தார். இதற்கிடையில் 3 மாதங்களுக்குள் அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலை நடத்த

தரப்பு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் ஓபிஎஸ் வழக்கு இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணமுராரி அமர்வு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது.

மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள போதே பொதுச் செயலாளர் தேர்தலுக்கு என்ன அவசரம்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி ஜூலை 11 பொதுக்குழுவிற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தங்களுக்கு கிடைத்த வெற்றியாக ஓபிஎஸ் தரப்பினர் கொண்டாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், இன்றைய தேதிக்கு அதிமுகவின் பொன்னியின் செல்வன் ஓ.பன்னீர்செல்வம் தான். எடப்பாடி பழனிசாமி ஆதித்ய கரிகாலன் ஆகிவிட்டார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும் போது, அதுவும் இன்றைய தினம் விசாரணைக்கு வரும் என்று பட்டியலிடப்பட்ட பின்னர், உட்கட்சி தேர்தல் குறித்து அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி பெரிய தவறு செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னர் அவர்கள் முடிவெடுத்திருக்கலாம். தற்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டு விட்டது. இனிமேல் இந்த தடையை விலக்குவதற்கு மனு போட்டு விசாரணைக்கு ஆஜராகி என நீண்ட சட்டப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

இது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய பின்னடைவு தான். அதேசமயம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிம்மதி பெருமூச்சை கொடுத்திருக்கும். ஏனெனில் அவரது தரப்பு மிகவும் பலவீனமாக இருந்து வருகிறது. சிவசேனா வழக்கு விசாரணையின் போது, மக்களாட்சி நடைபெறக் கூடிய நாட்டிலே எண்ணிக்கை தானே முக்கியம் என்று நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருந்தார்.

இந்த விஷயம் தற்போது தேர்தல் ஆணையத்திற்கு முன்பு சென்றிருக்கிறது. அதேபோன்ற ஒரு சூழல் அதிமுகவிற்கும் வரும். அப்போது எடப்பாடியின் கை ஓங்குவதற்கு வாய்ப்பிருக்கலாம். ஆனால் தற்போதைய சூழலில் அதிமுகவின் அரசியல் களம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சாதகமாக தான் காணப்படுகிறது. அடுத்தடுத்த திருப்பங்களுக்காக காத்திருப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.