சென்னை: சென்னை உயர்நீதி மன்றதிற்கு புதிய தலைமை நீதிபதியாக ஒடிசா உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் நியமனம் செய்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக நீதிபதி துரைசாமி பதவிக்காலம் அண்மையில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, உச்சநீதிமான்ற கொலிஜியம் ஒடிசா மாநில உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்தது. இதை ஏற்று குடியரசு தலைவர் முரளிதரை அதிகாரபூர்வமாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதிய நீதிபதியாக வர இருக்கும் ஒடிசா மாநில தலைமை நீதிபதி முரளிதர், சென்னை விவேகானந்தர் கல்லூரியில் வேதியியல் இளங்கலை பட்டம் பெற்றவர்.
தற்போது இவர் சென்னைக்கு மாற்றப்பட்டதால் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் ஜஸ்வந்த் சிங் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறுகிறார். இதே போல, ஜம்மு காஷ்மீர் உயநீதிமன்ற தலைமை தலைமை நீதிபதி , ராஜஸ்தான் மாநிலத்திற்கும், உத்தரகண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜார்கண்ட் மாநிலத்திற்கும், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மும்பை உயர்நீதிமன்றத்திற்கும், ஜார்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரிபுராவுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவின் படி மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஜனாதிபதி முர்மு பிறப்பித்துள்ளார்.