பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமாக குஜராத்துக்கு சென்றுள்ளார். 2ஆவது நாளான இன்று காந்திநகர் மற்றும் மும்பை சென்ட்ரல் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
முன்னதாக இன்றைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க காந்தி நகரில் இருந்து அகமதாபத்துக்கு பிரதமர் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது காந்தி நகர் – அகமதாபாத் சாலையில் ஆம்புலன்ஸ் வருவதை கண்டார்.
உடனடியாக தனது பாதுகாப்பு அதிகாரிகளிடம் தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தை ஓரமாக நிறுத்தி ஆம்புலன்ஸ் செல்ல உத்தரவிட்டார். சிறிது நேரத்தில் அந்த ஆம்புலன்ஸ் சென்ற பிறகு பிரதமர் மோடியின் வாகனங்கள் சென்றது.
இது குறித்த வீடியோவை குஜராத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், மோடி ஆட்சியில் விஐபி கலாசாரதிற்கு இடம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் மூலம் பிரதமர் மோடி சாலை விதிகளை கடை பிடிப்பதில் முன்மாதிரியாக திகழ்வதாக பாராட்டி வருகின்றனர்.
newstm.in