அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்,திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
திமுகவைப்பற்றி எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் எப்பொழுதுமே அவர்கள் வார்த்தை ஜாலம் செய்து தமிழை வைத்து ஏமாற்றி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டு மக்களுக்கு அம்மா வழியில் ஆட்சியை கொடுத்திருந்தார்கள் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய திருவிளையாடல் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்துள்ளது .
தலைவர் (எம்ஜிஆர்) கட்சி ஆரம்பித்ததற்கு பின், 1989 இல் அவர் இறந்ததுக்கு பிறகுதான் திமுக ஆட்சி்க்கு வந்தது. 1996 ஆம் ஆண்டு அம்மா (ஜெயலலிதா) மீது பொய் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்தார்கள்.
2006 இல் மைனாரிட்டி ஆட்சியாக இருந்தார்கள். அதற்குப் பிறகு திமுகவால் ஆட்சிக்கு வர முடியவில்லை. மு.க ஸ்டாலின் தனது அப்பா பாணியில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடைய திருவிளையாடலும் திமுக மீண்டு்ம் ஆட்சிக்கு வர காரணம். த்ற்போது ஸ்டாலினின் சாயம் வெளுத்துக் கொண்டிருக்கிறத. மக்கள் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.
அமைச்சர்களுடைய ஆணவ பேச்சு, திமுககாரர்கள் உடைய நடவடிக்கை மற்றும் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தினருடைய அடாவடி நடவடிக்கைகள் இப்போதுதான் வெட்ட வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இனிவரும் காலத்தில் மக்கள் திமுகவிற்கு பாடம் புகட்டுவார்கள். வருங்காலத்தில் திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தமிழ்நாட்டு மக்கள் தடுப்பார்கள்.
என்ஐஏ நடத்தும் சோதனையை எல்லாம் வைத்து பார்க்கும்போது, 2024 நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது. இது என்னுடைய சொந்த கருத்து. நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், கூட்டணி கட்சியோடு சேர்ந்து தான் போட்டியிடும். இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அணிலை போல் செயல்படுவோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
இபிஎஸ், அண்ணாமலை என எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்கெனவே 2024 இல் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் வரலாம் என்று அவ்வப்போது கூறிவரும் நிலையில், டிடிவி தினகரனும் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.