வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் 0.5 சதவீதத்தை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
மும்பையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில், ரெப்போ வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் வரையிலான 5 மாதங்களில் நான்காவது முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக, வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கு முன், கொரோனாவுக்கு முந்தைய 2019 ஆகஸ்டில், வட்டி விகிதம் இதே 5.40 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதை விட அதிகமாக உயர்ந்துள்ளது. வட்டி விகிதம் அதிகரித்ததை அடுத்து, வீட்டுக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டியும் அதிகரிக்கும். கடந்த 5 மாதங்களில் மட்டும் 1.4 சதவீதம் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement