திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் இரண்டு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்து, ஆபாசமாக பேசி வருவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் ராஜமுத்தெழில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியின் முன்பு திரண்டனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் சார்பில் கடிதம் ஒன்று அளிக்கப்பட்டது.
அதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதே ஆசிரியர் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தலைமை ஆசிரியரிடம் ஆசிரியர்களும், மாணவிகளும் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் ஆசிரியர் குழு அமைத்து விசாரணை செய்து தற்போது அந்த ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மேலும் கல்வித்துறை சார்பில் இருந்து முழுமையான நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து தற்காலிக பணியிடை நீக்கத்தில் இருப்பார் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in