வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
முதியோர் நல மருத்துவர், முதியோர் நல மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சியும், பட்டமும் பெற்றவர். வயதான காலத்தில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளையும் கண்டறிந்து அதற்குத் தக்க தீர்வு காண முயல்வதே இந்த மருத்துவரின் சிறப்பு. முதுமையில் தக்க சிகிச்சையின் மூலம் அவர்களின் வாழ்நாளை நீட்டிப்பது மட்டும் நோக்கமல்ல, வாழும் அந்த நாட்களில் நல்லதொரு வாழ்கையை அமைத்துக் கொடுப்பதே முதியோர் நல மருத்துவரின் நோக்கமாகும். முதியோர் நல மருத்துவரால் அது எப்படி முடிகிறது? அதற்கான பதில் இதோ :
தொல்லைகளை அறிதல் சிரமம்
சுமார் 70 வயது முதியவர் உறவினரின் துணையோடு ஒரு மருத்துவரிடம் ஆலோசனை பெறச் செல்லுகிறார். வீட்டிருந்து புறப்படும் பொழுது தனக்குண்டான எல்லாத் தொல்லைகளையும் மருத்துவரிடம் சொல் அதற்குத்தக்க சிகிச்சைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவருடைய எண்ணம். ஆனால், மருத்துவரைப் பார்த்த உடனேயே ஒருவித மனப்பதற்றத்தால் தான் சொல்ல வேண்டிய தொல்லைகளை மறந்துவிட்டு தேவையற்ற தொல்லைகளைச் சொல்விடுவார். உதாரணம்: தனக்கு சமீபத்தில் ஏற்பட்ட மார்பு வயை மறந்துவிட்டு, மலச்சிக்கலைப் பற்றியும், மூட்டுவயைப் பற்றியுமே மருத்துவரிடம் பேசுவார். இதுமட்டுமன்றி மறதி மற்றும் காது கேளாமையால் தன் தொல்லைகளை மருத்துவரிடம் முழுமையாக சொல்ல முடியாத நிலை ஏற்படும்.
முதியவரிடம், அவர்களுடைய தொல்லைகளை அறிந்து கொள்வதே ஒரு தனிக்கலை. ஒரு முதியவர் பரிசோதனைக்காக வந்ததும் முதியோர் நல மருத்துவர் அவருடைய கைகளைப் பிடித்து ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி விடுவார். ஆரம்பத்திலேயே அவருடைய தொல்லைகளைப்பற்றி கேட்காமல் நிதானமாக அவருடைய பெயர், வயது, ஊர் மற்றும் உறவினர்களைப்பற்றி பேசுவார். முதியவர் மனம் அமைதி அடைய அவர் தனது தொல்லைகளை விவரமாகத் தெரிவிக்க முடிகிறது. ஆகையால் முதியவரிடம் அவருடைய தொல்லைகளை அறிந்து கொள்ள மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இது முதியோர் நல மருத்துவருக்கே உரிய கைவந்த கலையாகும்.
முதியோரின் பிரச்சனைகளை முழுமையாக ஆராய்தல்
முதியோர் நல மருத்துவர், முதியவரை முழுமையாக ஆராய்ந்து அவருடைய பிரச்சனைகளை முதல் மதிப்பீடு செய்வார்.
-
என்னென்ன மருத்துவப் பிரச்சினைகள் உண்டு (Medical Assessment). உதாரணம்: மாரடைப்பு, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், காது கேளாமை, துாக்கமின்மை
-
அடுத்தது அவருடைய மனநலம் எவ்வாறு இருக்கிறது? (Mental Assessment). உதாரணம்: மறதி மற்றும் மனச்சோர்வு உள்ளவரா?
-
பெரியவரின் சுய செயல்பாடு எப்படி உள்ளது? (Functional Assessment) அதாவது அவருடைய அன்றாடத் தேவைகளை அவராகவே செய்து கொள்ள முடியுமா அல்லது பிறர் உதவி தேவைப்படுமா?
-
குடும்பத்தில் அவருடைய நிலை என்ன? (Social Assessment) கூட்டுக்குடும்பமா? தனிக்குடும்பமா? வீட்டில் அவருக்கு எந்த அளவிற்கு மரியாதை? நிதி வசதி எப்படி? இதற்கு மற்றவரின் உதவியை நாடுபவரா?
இப்படி முதியவரின் எல்லா பிரச்சினைகளையும் முழுமையாக ஆராய்ந்து, அதற்குப்பின் எந்தப்பிரச்சனை அவருக்கு சுமையாகத் தெரிகிறதோ அதற்கு முன்னுரிமை கொடுத்து, சிகிச்சையளிப்பது தான் முதியோர் மருத்துவரின் தலையாய பணியாகும். அவருடைய சிகிச்சையின் வெற்றிக்கு இது ஒரு முக்கியமான காரணமாகும்.
மாறுபட்டுக் காணப்படும் நோயின் அறிகுறிகள்
தொல்லைகளைக் கேட்டறிந்ததும், முதியவரின் உடல் முழுமையாகப் பரிசோதனை செய்யப்படுகிறது. முதுமையில் நோயின் அறிகுறிகள் மாறுபட்டு காணப்படும். உதாரணம்: மார்பு வயின்றி மாரடைப்பு வரலாம். வயிற்றுவ இல்லாமலேயே பித்தப்பபையில் கல் அடைப்பு ஏற்படலாம். அதிக இருமல், சளி இல்லாமலேயே காசநோய் மறைந்து தாக்கும். இப்படி மாறுபட்டு காணப்படும் நோய்களை சரியாகக் கண்டறிவது இத்துறையில் பயிற்சி பெற்ற மருத்துவரால் தான் முடியும்.
முதுமையின் விளைவா? அல்லது நோயா?
முதுமையில் இரண்டு விதமான மாற்றங்கள் உடல் தோன்றும்.
-
முதுமையின் விளைவு
-
நோய்களின் விளைவு.
இவை இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களை முதியோர் நல மருத்துவரால் எளிதில் கண்டறிந்து முதியவருக்கு விளக்கிக் கூற முடியும். அதற்கேற்றார் போல் தக்க சிகிச்சையும் அளிக்க முடியும்.
உதாரணம்:
கை நடுக்கம் முதுமையினாலும் வரலாம் அல்லது பார்கின்சன்ஸ் எனும் உதறுவாதம் நோயினாலும் வரலாம்.
மறதி முதுமையினாலும் வரலாம் அல்லது மறதி நோயினாலும் (Dementia) வரலாம்.
தைராய்டு தொல்லை சில நேரங்களில் முதுமையின் விளைவுக்கும், அக்காலத்தில் தோன்றும் நோய்களுக்கும் அதிக வித்தியாசம் இருக்காது. உதாரணம்: முதுமையில் தைராய்டு சுரப்பி குறைவாக சுரந்தால் உடல் சற்று பருக்கும். தோல் கடினமாயும் வறட்சியாகவும் மாறிவிடும். மந்தநிலை உருவாகும். சுறுசுறுப்பு குறையும்.
மலச்சிக்கலும் ஏற்படும். இவைகள் அனைத்தும் வயதான காலத்தில் வரக்கூடிய தொல்லைகளைப் போன்றே இருக்கும். ஆகையால் இத்தொல்லைகள் முதுமையினால் அல்ல, தைராய்டு குறைவாக சுரப்பதினால் ஏற்பட்டதே என்று அனுபவமிக்க ஒரு முதியோர் நல மருத்துவரால் எளிதில் கண்டறிய முடியும்.
முதுமையும் பலவித நோய்களும்
முதியவர் அதிகமாக தொல்லைகள் ஏதும் கூறாவிட்டாலும் ஒரு முதியோர் நல மருத்துவர் அவரை முழுமையாக பரிசோதனை செய்வார். அதன் மூலம் முதியவரிடம் தெரிந்தும் தெரியாமல் (Silent) இருக்கும் பலவித நோய்களைக் (Multiple diseases) கண்டறிய முடியும்.
பரிசோதனைகளின் மாற்றங்கள்
நோய்களை முழுமையாகக் கண்டறிய ஒரு சில பரிசோதனைகள் அவசியம். உதாரணம்: எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை, சளி மற்றும் சிறுநீர் முதயன. இப்பரிசோதனைகளை உடனே செய்து வா என்று ஒரு துண்டுச்சீட்டில் மிக சுலபமாக எழுதிக் கொடுத்துவிடலாம். ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் சிரமம். சளி அதிகம் இல்லாமல் இருக்கும் ஒரு நோயாளி, சளிக்கு பதிலாக எச்சிலை கொடுத்துவிடுவார். படுத்த படுக்கையாகக் கிடக்கும் ஒரு முதியவரின் சிறுநீரை எப்படி சுத்தமாக எடுத்து பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்ப முடியும்? இது மட்டுமல்ல, வயது ஆக ஆக பரிசோதனைகளின் முடிவுகளும் மாற வாய்ப்புண்டு. உதாரணம்: இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உப்புச்சத்து போன்றவை எவ்வித நோயுமின்றியே சற்று அதிகமாகக் காணப்படும். ஆகையால் எந்தப் பரிசோதனையை, எப்பொழுது, எப்படிச் செய்யவேண்டும் மற்றும் அந்த ஆய்வின் முடிவுகளை எப்படி பரிசீக்க வேண்டும் என்று முதியோர் நல மருத்துவருக்குத் தான் தெரியும்.
நோயுற்ற முதியவரின் குணாதிசியங்கள்
-
பலவித நோய்கள்
-
நாள்பட்ட நோய்களே அதிகம்
-
மாறுபட்ட நோயின் அறிகுறிகள்
-
செயல்திறன் குறைந்த உடல்நிலை
-
மறைந்து கிடக்கும் நோய்கள்
-
பலவித மருந்துகளின் துணை
-
பலவித தொல்லைகளுக்காக பல மருத்துவர்களை நாடுபவர்கள்
-
குடும்பம், நிதிசார்ந்த பிரச்சனைகளை அதிகம் சந்திப்பவர்கள்
-
பழைய நிலைமைக்கு வரமுடியாதவர்கள் – புணரமைப்பு தேவைப்படுவர்கள்
சிகிச்சை ஓர் சிக்கல்
முதியவர்களுக்கு நோய் என்னவென்று கண்டுபிடிக்கப்பட்ட பின்பு அடுத்த பிரச்சினை அவர்களுக்குத் தக்க சிகிச்சை அளிப்பது. ஏனென்றால், பலவித நோய்களுக்கு பலவித மருந்துகள் என்ற நிலை ஏற்படக்கூடும். சில சமயங்களில் மருந்துகளின் தீய விளைவுகள் நோய்களைவிடக் கொடியதாக இருக்கும். மேலும் சில நோய்களுக்கு மருந்தின்றியே தக்க சிகிச்சை அளிக்க முடியும். உதாரணம்: ஆரம்பநிலையில் உள்ள நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், மூட்டுவ. ஆகையால் முதியவருக்கு தக்க சிகிச்சை அளிப்பதற்கு ஆழ்ந்த அறிவும், அனுபவமும் உள்ள முதியோர் நல மருத்துவர் அவசியம்.
மறுவாழ்வு
ஒரு முதியவரின் நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளித்து அவர் பூரண நலம் அடைந்துவிட்டார் என்று கூறிவிடமுடியாது. அவர் தனது தேவைகளைத் தானே செய்து கொள்ளும் அளவுக்குத் தயார் செய்வது ஒரு முதியோர் நல மருத்துவரின் பொறுப்பாகும். உதாரணம்: பக்கவாதம் அல்லது மூட்டுவயினால் நடை குறைந்து போனவர்களுக்கு இயன்முறை சிகிச்சை மூலம் மீண்டும் அவரை பழைய நிலைக்கே கொண்டு வரச்செய்வது.
குடும்பப்பிரச்சினை – தனிக்கவனம் தேவை
மருத்துவப் பிரச்சினையைத் தவிர குடும்பம், நிதி சார்ந்த பிரச்சினைகளும் முதியோரை அதிகம் பாதிக்கும். முதியவர் யாருடன் எப்படி வசித்து வருகிறார்? கூட்டுக் குடும்பமா? அல்லது தனியாகவா? நிதி வசதி எப்படி? சொந்த வருமானமா அல்லது மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையா! வீட்டில் அவருக்கு எப்படி மதிப்பு, மரியாதை? இவைகளெல்லாம் பொறுத்துத்தான் ஒரு முதியவருடைய மனநலமும், உடல்நலமும் அமைகிறது. உதாரணம்: தனிமையில் நிதி வசதி குறைவோடு மனச்சோர்வுள்ள ஒரு முதியவருக்கு மனச்சோர்வுக்குண்டான மாத்திரை மட்டும் அவர் சோர்வை நீக்கி விடாது. முதியவருடைய குடும்ப நலத்தில் சற்று கவனம் செலுத்துவது அவசியம். சமூக சேவகிகள் மூலம் முதியவரின் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு அவர் அக்குடும்பத்தில் எப்படி இருக்கிறார் என்பதையும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் முதியோர் நல மருத்துவர் அக்குடும்பத்தாருடன் கலந்து பேசி, அவருடைய உடல் நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றிற்கு தகுந்தவாறு முதியவரை எப்படி பேணிக்காக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுவது முதியோர் நல மருத்துவரின் ஒரு முக்கியமான கடமையாகும்.
ஆகையால் முதுமைக்காலத்தில் தோன்றும் உடல் நலம், மனநலம் மற்றும் குடும்பம் சார்ந்த தொல்லைகளை முழுமையாக ஆராய்ந்து அதற்குத் தக்கவாறு சிகிச்சை அளிப்பது யாரால் முடியும்?
இக்கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன்!
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.