ஐஸ்வர்யா ராய் மீது பொறாமையில் நடிகை மீனா
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, அதன் பிறகு கதாநாயகியாக தென்னிந்திய சினிமாவில் ஒரு மிகப்பெரிய ரவுண்டு வந்தார். அதோடு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் மீனா சமீபத்தில் தனது கணவரை இழந்தா். அதிலிருந்து மெல்ல மீண்டு வருகிறார் மீனா. இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை பகிர்ந்து ஒரு பதிவு போட்டுள்ளார் மீனா. அதில், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அந்த வாய்ப்பு தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது. இது எனக்கு பொறாமையாக உள்ளது. இப்படி நான் பொறாமை கொள்வது இதுவே முதல் முறை. பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.