டெல்லி: சீன செல்போன் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.5,551 கோடி மதிப்புள்ள டெபாசிட்டை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. சியோமி குழுமம், அதன் இந்திய கிளையான சியோமி இந்தியா, ரெட்மி என்ற பெயரில் செல்போன்களை விற்பனை செய்து வருகிறது. அனுமதியின்றி ரூ.5,551 கோடிக்கு சமமான அன்னிய செலாவணியை இந்தியாவுக்கு வெளியே சியோமி அனுப்பியது. காப்புரிமை தொகையை அனுப்பியதாக சியோமி கூறுவது அன்னிய செலாவணியை அனுப்புவதற்கான சாக்குபோக்கு என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தொகைகளிலேயே இதுதான் மிகப்பெரிய தொகையாகும்.