மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து விலகவில்லை என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஜாஸ்பிரித் பும்ரா, தென் ஆப்ரிக்கா தொடருக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் விளையாடப் பயிற்சி மேற்கொண்ட போது, அவரது முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடைபெற்ற முதல் போட்டியிலிருந்து விலகினார்.
மீதம் உள்ள டி20 போட்டிகளில் அவர் விளையாடுவாரா என எதிர்பார்த்த நிலையில், ஜாஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக டி20 தொடர் உலகக் கோப்பையிலிருந்தும் விலகியுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால் “ T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஜாஸ்பிரித் பும்ரா இன்னும் விலகவில்லை அவரது காயம் குணமடைந்த உடனே ஆஸ்திரேலியா புறப்படத் தயாராவார் உலகக் கோப்பைக்கு இன்னும் நாட்கள் உள்ளது, அதற்கு முன்னதாகவே இதுபோன்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா T20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது.