புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயான் புயல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய இயான் புயல் உருவாக்கிய தருணத்தை நாசா விண்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட திகிலூட்டும் காணொளியை வெளியிட்டுள்ளது.

இயான் புயல் அந்த அளவில் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியதுடன் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல பேரின் வீடுகள் புயலில் தூக்கி வீசப்பட்டது. 2.6 மில்லியன் வீடுகள் மற்றும் தொழில் செய்யும் பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கினர். பல பேர் உடைமைகள் இழந்து வீடுகளை இழந்து நகரங்களை விட்டு வெளியேறியனர். அமெரிக்காவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரிய இயற்கைபேரிடரான இது கருதப்படுகிறது.

இதேவேளை இயான் புயலால் புளோரிடா மாகாணம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் (28) பாதித்துள்ளது. புயலில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில் 7 ஆயிரம் இராணுவ வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்தப் புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் 22 இலட்சத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா மாகாணங்களிலும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. புதன், வியாழக்கிழமை என இரு நாட்களில் 4 ஆயிரம் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்துள்ளது.

இந்நிலையில், இயன் சூறாவளியால் புளோரிடா மாகாணம் முழுவதும் கடும் துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார். இந்தச் சூறாவளியால் கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாக குறிப்பிட்ட அவர், மேலும் வரலாற்றில் மிகக் கொடிய சூறாவளியாக இயான் புயல் உள்ளது என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.