தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். ஆளுங்கட்சிக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களில் அண்ணாமலையின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கட்சியை விட அண்ணாமலை வேகமாக வளர்ந்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலை இரண்டு வாரப்பயணமாக கடந்த மாதம் 30 ஆம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அங்கு, அரசியல் தலைமை உள்ளிட்ட பயிற்சிகளை அண்ணாமலை மேற்கொள்ள இருப்பதாகவும், ஈழ தமிழர்கள் உட்பட அமெரிக்க வாழ் தமிழர்களை அவர் சந்தித்து பேசவிருப்பதாகவும் பாஜக வட்டாரம் தெரிவிக்கின்றது.
தமிழக அரசியலில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு முக்கிய இடம் உண்டு. இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமை மற்றும் ஈழ போரின் இழப்புகளை முன்னிறுத்தி தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இன படுகொலை குறித்த விவாதத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வந்தாலும் சிங்கள அரசுக்கு பாஜக அளித்து வரும் ஆதரவை காரணம் காட்டி வெறுப்பு அரசியலில் தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் ஈடுபடுவதாக சொல்லப்படுகிறது.
இதில் ஈழ தமிழர்களின் நிலைப்பாடு என்ன? ஈழ தமிழர்களுக்கு உண்மையில் ஆதரவாக இயங்குவது யார்? ஈழ தமிழர்கள் விவகாரத்தில் பணம் வேட்டை நடத்தி சொந்த ஆதாயத்துக்கு அரசியல் செய்கிறவர்கள் பற்றி ஈழ தமிழர்களிடம் கருத்துக்களை கேட்க அண்ணாமலை தீவிரம் காட்டி வருகிறார். அதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி மூன்று நாட்கள் பயணமாக அண்ணாமலை இலங்கைக்கு சென்றார் என்பதை நினைவுகூர வேண்டும். தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள அண்ணாமலை அரசியல் தொடர்பான ட்ரெய்னிங்கையும் முடித்துக்கொண்டு அங்குள்ள இலங்கை தமிழர்களிடம் கலந்துரையாடவுள்ளார்.
அப்போது இங்குள்ள
கட்சி உள்ளிட்ட பெரிய கட்சிகளை குறித்தும் அவர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் பல தகவல்கள் அண்ணாமலைக்கு கிடைக்கலாம். பயணம் முடிந்து அக்., 12 இல் சென்னைக்கு திரும்பும் அண்ணாமலை ஈழ தமிழர் அரசியலில் தீவிரமாக இறங்குவார் என்றும் அதுதொடர்பான அறிக்கையை கட்சி தலைமையிடம் சமர்பிப்பார் என்றும் கூறப்படுகிறது.