நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சில பொருட்களின் இறக்குமதித் தடையை அரசாங்கம் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 23 அன்று அத்தியாவசியமற்ற பல பொருட்களின் இறக்குமதியை இடை நிறுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனடிப்படையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படக்கூடிய உற்பத்திகள் அல்லது அத்தியாவசிய மற்றவை என்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் டொலர்கள் பற்றாக்குறையாக காணப்படுவதனால்
எரிவாயு, எண்ணெய், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காகவே இவ் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்து உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தலில் 1 ஆயிரத்து 465 பொருட்களை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக , இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.