இதை செய்தால் தான் ரேஷன் பொருள்; தமிழக அரசு அதிரடி!

தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்ப அட்டைதார்களுக்கு பொது விநியோகம் திட்டத்தின் கீழ் இலவசமாகவும், குறைந்த விலையிலும் அரசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.

பொது விநியோகம் கணினி மயமாக்கப்பட்டு பின்னர் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டு, விற்பனை முனைய இயந்திரத்தின் வாயிலாக கைரேகை பதிவு சரிபார்க்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஆனாலும் தொடர்ச்சியாக பயோமெட்ரிக் கைரேகை பதிவு முறையில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறு பிரச்சனைகளால், குறித்த நேரத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் ரேஷன் கார்டுதாரர்கள் அவதிப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தபடி உள்ளது.

எனவே, ஸ்மார்ட் ரேஷன் அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு உள்ளதால், கைரேகை பதிவிற்கு பதில் கருவிழி பதிவு முறை கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம் ரேஷன் கார்டுதாரர்கள் சிரமம் இல்லாமல் பொருட்களை வாங்கிச் செல்ல வழிவகை செய்யப்படும். கர்நாடகா உள்பட மற்ற மாநிலங்களில் கருவிழி பதியும் முறை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே இந்த நடைமுறை கொண்டு வருவதற்கு தொழில்நுட்ப ரீதியான வேலைகளுக்கான காலம் அவகாசம் மட்டும் தேவைப்படுவதால் அக்டோபர் 15ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும்.

அதே சமயம், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதற்காக உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, மற்றொருவர் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கி பயன்பெற முடியும். இவ்வாறு தமிழக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.