புனித ஜெபமாலை அன்னை சர்ச் தேர்த்திருவிழா; போப் ஆண்டவர் தூதர் பங்கேற்பு

சோமனூர்: கிபி 1600ம் ஆண்டில் கட்டப்பட்ட கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை ஆலயம், கோவை மறை மாவட்டத்திற்கு முதன்மை கோவிலாகவும், தாய் கோயிலாகவும் விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புபெற்ற இத்திருக்கோவில் கடந்த 2019 பசிலிக்கா திருத்தலமாக தரம் உயர்த்தி போப்பாண்டவர் அறிவித்தார். இதனால் தமிழகத்தில் 6வது திருத்தலமாக செயல்படுகிறது. இந்த ஆண்டு தேர்பவனி நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. நேற்று மாலை கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாசுக்கு நன்றி வளைவில் இருந்து பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது.

இன்று ஆயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. மாலை சிறிய தேர் பவனியும், இதைத்தொடர்ந்து திருப்பலியும், இரவு கலைநிகழ்ச்சியும் நடக்கிறது. தேர்பவனியை நடத்தி வைக்க நேபாள திருத்தூதர் லியோ போல்தோ ஜிரெல்லி வருகிறார். இந்த தேர்பவனியில் சென்னை, தூத்துக்குடி, ஊட்டி, சேலம், திருச்சி, கோட்டாறு, சேலம், கோவை உள்ளிட்ட பங்குகளில் இருந்து 9 ஆயர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை இரவு தேர்பவனி நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.