அடுத்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து கிராமங்களுக்கும் 5ஜி சேவை கொண்டு சென்று சேர்க்கப்படும் என்று ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
6ஆவது மொபைல் காங்கிரஸ் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அப்போது நாட்டில் 5ஜி சேவையை முதற்கட்டமாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 5ஜி சேவையானது டெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்பட 13 இடங்களில் அறிமுகமாகிறது.
நிகழ்வில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பங்களான செயற்கை நுண்ணரிவு, ரோபோட்டிக்ஸ், பிளாக்செயின்,மெட்டாவெரஸ் போன்றவற்றை பயன்படுத்தும் திறவுகோளாக 5ஜி இருக்கப்போகிறது என்றார்.
2023ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும் 5ஜி சேவையை கொண்டு சேர்ப்பதே இலக்கு என்றும், இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாடு இனி ஆசிய கைபேசி மாநாடாக மாற வேண்டும் என்று கூறினார்.
இவை அனைத்தும் பிரதமரின் உறுதியான செயல்பாட்டால்தான் சாத்தியமானது. உலக அரங்கில் தொலைத்தொடர்பு துறையில் தலைமை ஏற்க நாம் தயாராக உள்ளோம் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
நாட்டில் கிராம நகர்ப்புற ஏற்றத் தாழ்வை களைந்து, வேளாண்மை, சேவை, தொழில், வர்த்தகம் போன்றவற்றில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தாலம். நாட்டின் அனைத்து துறைகளிலும் நவீனத்தை புகுத்தி இந்திய பொருளாதாரத்தை குறிப்பாக சிறு குறு தொழில்களின் உற்பத்தி, லாபத்தை பெருக்கலாம்.
மேலும், 5ஜி சேவையானது இந்தியாவை உலகின் அறிவுசார் தலைநகராக மாற்றி, உயர் மதிப்பிலான டிஜிட்டல் சேவைகளை இந்தியர்கள் உலகிற்கு தரலாம் என்று அம்பானி தெரிவித்துள்ளார்.
newstm.in