மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கு – மீட்க வராத வனத்துறையால் பொதுமக்கள் அதிருப்தி

தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் மின்சாரம் தாக்கி குரங்கு படுகாயம் அடைந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை  வனப்பகுதியிலிருந்து குரங்குகள் உணவைத் தேடி அடிக்கடி ஊருக்குள் வந்து விடுகின்றன. இந்நிலையில் இன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று தேன்கனிக்கோட்டை காந்தி சாலையில் கோயில் அருகே மின்சார வயரில் தொங்கி விளையாடியது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் கை, கால் பகுதிகளில் தீப்புண் ஏற்பட்டு படுகாயம் அடைந்த குரங்கை மீட்க பொதுமக்கள் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனையடுத்து வனத்துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும், கால்நடை மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்தும் யாரும் வராததால் வலியால் துடித்துக் கொண்டிருந்த குரங்கை மீட்க பொதுமக்களே முயற்சிசெய்து நீண்ட நேரம் போராடி அதனைப் பிடித்து மருத்துக்கள் பூசி சிகிச்சை அளித்தனர்.

image
மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த குரங்கிற்கு சிகிச்சை அளிக்க தகவல் அளித்தும் வராத அதிகாரிகள் செயலால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர். மீண்டும் குரங்கு வலியால் துடித்து கொண்டிருந்ததை பார்த்த இளைஞர்கள் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று முறையிட்டனர். இதையடுத்து வன ஊழியர்கள் அக்குரங்கை பிடித்து வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: மது குடித்துக் கொண்டே அழுத குழந்தைக்கு சூடுவைத்த கொடூரம் – தாய் வளர்ப்பு தந்தை கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.