நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக , பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் நிலக்கரியை கொண்டு வரும் சில கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன. இதன்படி, மின் துண்டிக்கப்படும் நேரத்தை அதிகரிப்பதற்கான தேவை ஏற்பாடாது. இரண்டு இலட்சத்து 25 ஆயிரம் மெற்றிக் தொன் நிலக்கரி தற்போது கையிருப்பில் உள்ளது.
இதேவேளை அடுத்த வருடத்திற்கு தேவையான 25 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரிக்கான விலைமனு கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரட்நாயக்க பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.