விகடன் ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்: கதை டு திரைக்கதை உருவாக்கம் – ஒரு படம் வெற்றிபெற எது முக்கியம்?

விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் திரைக்கதை வடிவமைப்பாளர்களில் ஒருவர்தான் பாலகுமாரன் தமிழ்ச்செல்வன். தமிழ் சினிமாவின் புதிய திரைக்கதை ஆசிரியர், திரைக்கதை மருத்துவர். ‘கிரியோனி – பிலிம் & ஸ்கிரிப்ட் ஸ்ட்ராட்டஜி கம்பெனி’ என்ற நிறுவனத்தை இவரின் நண்பர் மாணிக்கஜமீனுடன் இணைந்து நடத்திவருகிறார்.

ஒரு ஸ்கிரிப்ட்டைப் பல கோணங்களில் ஆராய்ந்து அதில் உள்ள நிறைகுறைகளை இயக்குநர் மற்றும் தயாரிப்புத் தரப்புக்கு எடுத்துரைப்பது மட்டுமன்றி, அதைச் சரி செய்து ஒரு வெற்றிப் படத்திற்கான திரைக்கதையாக மாற்றித் தருகிறார். `சிவப்பு மஞ்சள் பச்சை’, `கொலை’ என்ற இரண்டு படங்களுக்கான திரைக்கதையில் பணிபுரிந்திருக்கிறார்.

“உங்கள் பார்வையில் தமிழ் சினிமாவில் நல்ல கதை சொல்லி யார்?”

பஞ்சு அருணாசலம்

“தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸ் குழந்தைகளிலிருந்து பெரியவர்வரை ஒவ்வொருவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வெவ்வேறு மனநிலையில் வருவார்கள். அப்படி அவர்கள் எந்த மனநிலையில் வந்தாலும் திரைப்படம் தொடங்கி முதல் பத்து நிமிடத்திற்குள்ளேயே அவர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனது கதை சொல்லும் ஆற்றலின்மூலம் ஆடியன்ஸை தன்னையே மறக்கச்செய்து கதைக்குள் மூழ்கச்செய்ய வேண்டும். படம் முடிந்தவுடன் அவர்கள் அனைவரும் ஒரே மனநிலையில் எந்தக் கேள்வியும் தயக்கமும் இல்லாமல் படம் ஹிட் என்று ஒரே மாதிரி கூறவைப்பவரே ஒரு சிறந்த கதை சொல்லி. இன்றைய சூழலில் நமக்கு நெருக்கமானவர்களே நாம் சொல்வதைக் கேட்பதில்லை. ஆனால் நமக்குப் பரிட்சயமே இல்லாத, இதுவரை நம் வாழ்நாளில் சந்தித்திராத பல லட்சம், பல கோடி மக்களுக்குத் திரையின் மூலம் ஒரு கதை சொல்லி அனைவரையும் திருப்திப்படுத்துவதென்பது ஒரு மாபெரும் கலை. அதைத் திறம்படச் செய்த ஜாம்பவான்கள் பலர் தமிழ் சினிமாவில் உள்ளனர்! அதில் நாம் கொண்டாட மறந்த ஓர் அற்புதமான கதை சொல்லி, மறைந்த ஆளுமை பஞ்சு அருணாசலம் அவர்கள்!”

“ஒரு சினிமாவில் Three act structure அடிப்படை விதி என்கிறார்கள். ஷிட்ஃபீல்டு போன்ற பல தியரிகளில் இங்குப் புத்தகமாகவும் இணையத்திலும் படிக்க முடிகிறது! அப்படி படித்துவிட்டு எல்லோரும் திரைக்கதை எழுதலாமே?”

“தாராளமாக… ஆனால், ஆங்கிலத்தில் இருக்கும் திரைக்கதை வடிவங்களின் வகைமை புத்தகங்களைப் புரிந்து கொள்ள உங்களுக்கு நேரம் பிடிக்கும். வருடக்கணக்கில்கூட ஆகலாம்.

ஹாலிவுட்டில் திரைக்கதை எழுத சில Screenplay Structures உள்ளன << The Foundations of Screenwriting (Three-Act Structure), Save The Cat (Beat Sheets), The Hero’s Journey இப்படி நிறைய உள்ளது. Creoni’s Story Goal Structure தான் எங்களால் உருவாக்கப்பட்ட எளிமையான திரைக்கதைக்கான கட்டமைப்பு!

பத்து வருடங்களாக இந்த வடிவத்தை பல திரைப்படங்கள் மூலம் நாங்கள் வடிவமைத்திருக்கிறோம்.

கதைக்கு எல்லைகள் கிடையாது. ஒரு நாளில் நடக்கும் கதையாக இருக்கலாம், ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதையும் அடக்கிய சுயசரிதையாக இருக்கலாம். அது ஒரு பக்க கதையாக இருக்கலாம். பல்லாயிர பக்கங்கள் கொண்ட நாவலாகவும் இருக்கலாம். ஆனால் திரைக்கதை என்பது அப்படிக் கிடையாது, நீங்கள் எந்தக் கதையைத் திரைக்கதையாக மாற்ற வேண்டும் என்றாலும் அதை இரண்டிலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் கூற வேண்டும். அந்த காலவரைதான் திரைக்கதைக்கான கட்டமைப்பு (Screenplay Structure). நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தக் காலவரையறையான இரண்டிலிருந்து மூன்றுமணி நேரத்திற்குள்தான் நீங்கள் படம் எடுத்தாக வேண்டும்.

Three-Act Structure

திரைக்கதை கட்டமைப்பு (Screenplay Structure) என்னவென்று தெரிந்து எழுதும் போது திட்டமிட்டு நம்மால் தெளிவாகவும் விரைவாகவும் ஒரு சிறந்த திரைக்கதையை எழுத முடியும். Screenplay Structure கட்டமைப்பு என்னவென்று தெரியாமல் எழுதுவதனால்தான் ஒரு திரைக்கதை எழுத ஒரு வருடம், இரண்டு வருடம் தேவைப்படுகிறது.

ஒரு இருபதடி உயரத்தளத்திற்குப் படிக்கட்டில் ஏறிச் செல்லும்போது மிகச் சுலபமாக ஏறிவிடலாம், ஆனால் படிக்கட்டு இல்லாமல் ஏறமுடியுமா என்றால், அது சவால்தான். அனைவராலும் ஏறமுடியாது. அதேபோல்தான் Screenplay Structure கட்டமைப்பு. அது என்னவென்று தெரிந்து திரைக்கதை எழுதும் போது எவராலும் ஒரு சிறந்த திரைக்கதையை எழுதமுடியும், அது தெரியாமல் எழுதினால் திரைக்கதை என்பதே சவாலான விஷயமாகத்தான் இருக்கும்.”

“கதை எழுதுவதற்கும் திரைக்கதை எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன?”

“கதாசிரியருக்குக் கதையை இவ்வளவு பக்கத்துக்குள் எழுத வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. எவ்வளவு பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் திரைக்கதையாசிரியர் ஒரு திரைக்கதையை 120 பக்கங்களில் (மூன்று மணி நேரத்திற்குள்) எழுதவேண்டும்.

ஒரு பெரிய கதையையோ வாழ்க்கையையோ திரைக்கதையாக மாற்றும் போது அதை இரண்டிலிருந்து மூன்று மணிநேரத்துக்குள் கூற வேண்டும். அந்தக் கதையை மூன்று மணிநேரத்துக்குள் திரைக்கதையாகச் சுருக்கி எழுதும்போது முழுக்கதையையும் படித்தபோது கிடைத்த உணர்வும் அனுபவமும் குறையாமல் இருக்க வேண்டும். உதாரணமாக ‘நாயகன்’ படத்தை எடுத்துக்கொள்ளலாம். அது வேலுநாயக்கர் என்ற மனிதனின் அறுபது வருட முழு வாழ்க்கைக் கதையை மூன்று மணி நேரத்திற்குள் திரைக்கதையாக எழுதிய படம். ஆகினும் அந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் போது அந்தக் கதாபாத்திரத்துடன் அறுபது வருடங்கள் வாழ்ந்த உணர்வும் முழுமையான அனுபவமும் கிடைக்கும்.

விகடன் ஸ்க்ரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்

பதிவு செய்ய: https://rb.gy/pkh2o1

அதே போல் ஒரு ஐடியாவையோ ஒரு நாளில் நடக்கும் கதையையோ திரைக்கதையாக மூன்று மணிநேரத்திற்குள் விரிவடையச்செய்து எழுதும்போது அதன் பரபரப்பு குறையாமல் உணர்வுப்பூர்வமான சுவாரஸ்யமான அனுபவமாக இருக்க வேண்டும்.

உதாரணமாக ‘கைதி’ படத்தை எடுத்துக் கொள்வோம். ஓர் இரவில் நடக்கும் கதையை இதற்கு மேல் சுவாரஸ்யமான அனுபவமாகக் கட்டமைக்க முடியுமா என்றளவிற்கு எழுதப்பட்ட ஒரு திரைக்கதை.

கதையைத் திரைக்கதையாக மாற்றி எழுதும்போது அந்தக் கதையைச் சுருக்கலாம், குறைக்கலாம், விரிவடையச் செய்யலாம். ஆனால் அந்தக் கதையை முழுமையாகப் படிக்கும் போது இருந்த உணர்வும், சுவாரஸ்யமும், அனுபவமும் சிறிதும் குறையாமல் திரைக்கதையில் இருக்க வேண்டும். அப்படி எழுதுபவரே ஒரு சிறந்த திரைக்கதையாசிரியர்!”

“மற்ற இண்டஸ்ட்ரிகளில் உங்களைப் போன்றவர்களுக்கு வரவேற்பு இருக்கிறது. தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் வரவேற்பில்லை? இங்கிருக்கும் சிக்கல்கள் என்ன?”

“இப்போது மெல்ல மாறி வருகிறது. பெரிய பட்ஜெட்டில் புகழ்பெற்ற இயக்குநர் இயக்கி சூப்பர் ஸ்டார் நடித்தாலும் கதை நன்றாக இல்லையென்றால் மக்கள் அந்தத் திரைப்படத்தைத் தோல்வியடையத்தான் செய்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் அறிமுக இயக்குநர்கள் இயக்கி, முற்றிலும் புதுமுகங்கள் நடித்து எவ்வித ப்ரோமோஷனும் இல்லாமல் வந்து வெற்றியடைந்த பல திரைப்படைகளின் வெற்றிக்கு அடிப்படையான காரணம் அந்தப் படத்தின் கதைதான் (சேது, காதல் கொண்டேன், சென்னை 600028, பசங்க, மைனா, பீட்சா, சுப்ரமணியபுரம், சதுரங்க வேட்டை, காக்கா முட்டை, மாநகரம்).

ஒரு ஹிட் படத்தை உருவாக்க நல்ல கதை இருந்தால் போதும், அந்த கதையைத் திறம்பட யார் இயக்கினாலும் அவரை புகழ்பெற்ற இயக்குநராகவும், அந்த கதையில் யார் நடித்தாலும் அவரை ஸ்டாராகவும் அந்தக் கதை மாற்றிவிடும்.

சுப்ரமணியபுரம்

ஒரு பாடலுக்கும், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்க்கும் செலவு செய்யும் இவர்கள் கதையைச் சிறந்த முறையில் கள ஆய்வு செய்து எழுதுவதற்கும், எழுத்தாளர்களுக்கும் செலவு செய்ய விரும்புவதில்லை. மற்ற அனைத்து இண்டஸ்ட்ரிகளில் கதை, திரைக்கதை எழுதுபவர்களுக்கு இயக்குநருக்கு அடுத்தபடியான அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால் நம் இண்டஸ்ட்ரியில் பெரும்பாலும் அவர்களுக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது.

கதைக்குச் செலவு செய்யாமல் திரைப்படத்தின் உருவாக்கத்திற்கும், நடிகர்களுக்கும், இதர டெக்னீஷியன்களுக்கும், பப்ளிசிட்டிக்கும், அதிக செலவு செய்கிறார்கள். இது அஸ்திவாரம் போடாமல், அடுக்குமாடி கட்டடம் கட்டுவது போல, அது கடைசியில் தோல்வியில்தான் வந்து முடிகிறது. இவர்கள் அனைவரது உழைப்பும், நேரமும், பணமும் விரயமாகின்றன.”

திரைக்கதை வடிவமைப்பாளர் பாலகுமாரன்

விகடன் நடத்தும் `ஸ்க்ரீன்ப்ளே ஒர்க் ஷாப்’ ஒன்லைன் தொடங்கி, கதை எப்படி ஹிட் திரைக்கதையாக… லேயர் லேயராக உருமாறுகிறது என்பதை தியரிகளாக யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்றுக்கொடுக்கவிருக்கிறார் தமிழ் சினிமாவின் இளம் திரைக்கதைப் பயிற்சியாளர் மற்றும் ஆலோசகர் பாலகுமாரன்.

அக்டோபர் 8-ம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. இடம்: ஆனந்த விகடன், 757, அண்ணாசாலை, சென்னை – 2.

பதிவு செய்ய: https://rb.gy/pkh2o1

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.