குஜராத் மாநிலம் சூரத் மற்றும் ஜாம்நகரில் அச்சடிக்கப்பட்ட 90 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி இந்திய ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இதில் சுமார் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபகாலங்களில் குஜராத்தில் போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் சூரத்தில் உள்ள காம்ரேஜ் காவல்துறையினர் விசாரணையில் போலி நோட்டுகளை நேரடியாக சந்தையில் புழக்கத்தில் விடாமல், தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மக்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது இதன் மூளையாக செயல்பட்ட ஹிதேஷ் கொட்டாடியா உட்பட மூவரை கைது செய்தனர்.
அவசர ஊர்தியிலிருந்து இருந்து 25.80 கோடி ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் மீட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். செப்டம்பர் 29 அன்று காம்ரேஜில அவரது சொந்த ஊரான மோட்டா வடலாவில் இருந்து ரூ.53 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக ரூ.90 கோடி போலி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM