வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பேரூராட்சி 2வது வார்டு மேலத்தெருவில், பராமரிப்பு இல்லாத மகளிர் கழிப்பறையை சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு பேரூராட்சியில் உள்ள 2வது வார்டு மேலத்தெருவில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பெண்களுக்காக கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இங்கு தண்ணீர் வசதி இல்லை.
கழிப்பறைகளுக்கு கதவுகளும் இல்லை. இதனால், பெண்கள் கழிப்பறையை பயன்படுத்துவதில்லை. கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து, கதவுகளை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, பராமரிப்பில்லாத கழிப்பறைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து பெண்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தெருவில் குழாய் பதிப்பதற்கு தோண்டிய பேவர் பிளாக் கல்லை மீண்டும் தோண்டிய இடத்தில் பதிக்காமல் உள்ளனர். இதனால், அந்த இடம் பள்ளமாக உள்ளது. உடனடியாக அந்த இடத்தில் பேவர் பிளாக் கல் பதிக்க வேண்டும். குடிநீர் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் தண்ணீர் கிடைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
இது குறித்து ராமமூர்த்தி கூறுகையில்:
2வது வார்டு மேலத்தெருவில் பெண்களுக்கான கழிப்பறையை பராமரித்து, ஏற்கனவே போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில், பைப் லைன் போட்டு, கழிப்பறை கட்டிடத்தின் மீது தண்ணீர் தொட்டி வைத்து, அதில் தண்ணீர் ஏற்றி, கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்க வேண்டும். கழிப்பறைகளுக்கான கதவுகள் அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.