வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கிவ்: நீண்ட காலமாக உக்ரைனை வீழ்த்த முடியாமல் திணறும் ரஷ்யா அவ்வப்போது கைப்பற்றிய சில நகரங்களை உக்ரைனிடமே இழந்து வருகிறது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த பிப்ரவரியில் இருந்து ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனின் வட கிழக்கு பகுதிகளில் பல முக்கிய நகரங்கள் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்தன.இரு நாடுகளுக்கும் இடையேயான சண்டையில், 1,400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, இரு நாடுகளையும் சேர்ந்த லட்சக்கணக்கான ராணுவ வீரர்களும் பலியாகினர்.
இந்த சண்டையால் உக்ரைனுக்கு 80 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உக்ரைன் வீரர்கள் மிகவும் ஆவேசமாக போரிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கார்கிவ் மாகாணத்தில் உள்ள குபியான்ஸ்க் நகரை, ரஷ்ய ராணுவத்திடமிருந்து மீட்டனர். அதே மாகாணத்தில் உள்ள லிஜியும் நகரையும் உக்ரைன் ராணுவம் மீட்டது. பீரங்கிகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை ஆங்காங்கே போட்டு விட்டு, ரஷ்ய ராணுவத்தினர் ஓட்டம் பிடித்தனர்.
இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள லிமான் மற்றும் டொனட்ஸ்க் நகரங்களை உக்ரைன் வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். லிமானில் உள்ள டவுன் நிர்வாக நகர கட்டடத்தின் மீது ஏறி நின்றபடி உக்ரைன் வீரர்கள் படங்களை சமூக வலை தளங்களில பதிவிட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த ரஷ்ய கொடிகளை அகற்றி சாலைகளில் வீசினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement