தமிழ்நாட்டில் சமீப காலமாகவே இந்து மத நம்பிக்கைக்கு எதிராக
துணை பொதுச்செயலா் ஆ.ராசா தொடா்ந்து பேசி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபடி உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பொறுத்தவரை மத நம்பிக்கை இல்லாதவர் என்றாலும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தில் உள்ள சிலருக்கு இந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது.
அதுமட்டுமல்லாமல், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், மூத்த நிா்வாகி ஜெகத்ரட்சகன் எம்.பி உள்பட பலர் இறை நம்பிக்கையை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலினே நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு,‘எங்கள் கட்சியில் 90 சதவீதம் இந்துக்கள் உள்ளனர்’ என, கூற வேண்டிய நிலை உருவானது.
அந்தளவுக்கு இந்து மக்களின் வாக்கு வங்கிக்கு பாதகம் வந்துவிட கூடாது என்பதில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமல்லாமல் கட்சியும் கூட தெளிவாகவே கணக்கு போட்டு காய் நகர்த்தி வருகிறது.
அப்படி இருக்கையில், இந்துக்களுக்கு எதிராக ஆ.ராசா பேசி வருவதாக குவியும் புகார்களால், திமுக தலைவர்
தா்மசங்கடத்தில் ஆழ்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிலும் இந்துக்களை ஒருங்கிணைக்க இந்த விவகாரத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையிலெடுத்து அக்கட்சிக்கு சாதகமாக பயன்படுத்த முயன்று வருவது முதல்வர் ஸ்டாலினை ஏகத்துக்கும் டென்ஷன் ஆக்கியுள்ளது.
அதே சமயம் ஆ.ராசாவின் பேச்சு மூலம் சாதி, மத முரண்கள் திமுகவுக்கு எதிராக உருவாகி வருவதால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதிலும் முதல்வா் ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார்.
இதன் காரணமாகவே ஆ.ராசா விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அமைதி காத்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை ஆ.ராசா பேச்சை அங்கீகரித்தால் திமுகவுக்கு எதிராக இந்துக்கள் ஒன்று திரள்வார்கள் என கணக்கு போட்டிருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக கட்சிக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க ஆ.ராசா மீது திமுக தலைவர் விரைவில் ஸ்டாலின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.