மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சருக்கும் சீனாவின் பெட்ரோ-சைனா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இதுதொர்பாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் தகவல்களை பதிவிட்டுள்ளார்
இந்த பேச்சுவார்த்தைகளின் போதுஇ நிலுவையில் உள்ள கொடுப்பனவுகள்இ மீள செலுத்தும் முறைமைகள் மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தொடர்ச்சியான விநியோகத்தை மேற்கொள்வது குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளைஇ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பெட்ரோ சைனா அதிக அளவில் எண்ணெய் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதுடன்இ 10 ஆண்டுகளாக சிறந்த புரிந்துணர்வை கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.