சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பிறந்தநாள் அன்றே கல்லூரி மாணவன் ஒருவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாமிநாயக்கன்பட்டியை சேர்ந்த வேலு என்பவருடைய மகன் கபிசேனா, கல்லூரி விடுமுறை என்பதால் மாங்குப்பை ஏரியில் நண்பர்களுடன் குளிப்பதற்காக சென்றுள்ளார்.
பரிசல் மூலம் ஏரியின் மையப்பகுதியில் நண்பர்களுடன் சென்ற கபிசேனா, ஆர்வத்துடன் ஏரியில் குதித்ததாக சொல்லப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் தேடியும் மாணவனின் உடல் கிடைக்கவில்லை.