சமீப காலமாகவே திரை பிரபலங்கள் பலரும் விவாகரத்து பெற்று வருவது தொடர்கதையாக ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் விவாகரத்து பெற போவதாக செய்திகள் பரவி திரையுலகினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு இருவரும் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர். அதிக சம்பளம் வாங்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோனே இருந்து வருகிறார், இந்த இரண்டு பிரபலங்களும் தற்போது பிஸியாக இருந்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரன்வீர் சிங் நடத்திய போட்டோஷூட் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது, இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தற்போது தீபிகா படுகோனே, பிரபாஸுடன் இணைந்து நடித்து வருகிறார், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரது உடல்நிலை மோசமாக போனதற்கு காரணமா மன அழுத்தம் தான் சிலர் கூறுகின்றனர், அதாவது சில மாதங்களாகவே ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே ஆகிய இருவரும் மண வாழ்க்கையில் சந்தோஷமாக இல்லையென்றும் அதனால் தான் தீபிகாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த நட்சத்திர தம்பதியார் விவாகரத்து செய்ய முடிவடுத்து இருப்பதாகவும் தகவல்கள் தீயாக பரவி வருகிறது. இவர்களின் விவாகரத்து குறித்த செய்திகள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த போதிலும் இதுவரை இருவரும் இதுபற்றி எதுவும் கூறவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ரன்வீர் சிங் பிங்க் நிற உடையணிந்து ஒரு புகைப்படத்தை அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி இருந்தார், அந்த புகைப்படத்திற்கு தீபிகா ‘எடிபிள்’ என்று கமெண்ட் செய்துள்ளார் அதற்கு பதிலளிக்கும் விதமாக ரன்வீர் முத்த எமோஜி ஒன்றை பதில் கமெண்ட் செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்து இருக்கின்றனர்.