Breaking: பெய்ஜிங் சென்ற ஈரான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: களத்தில் இறங்கிய IAF

டெஹ்ரானில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்குச் சென்ற மஹான் ஏர் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அந்த விமானம் டெல்லி ஏடிசியை தொடர்பு கொண்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும், இதற்கு மறுப்பு தெரிவித்த விமானம் இந்திய வான்வெளியை விட்டு வெளியேறியது.

இந்த திடீர் நெருக்கடிக்கு எதிர் நடவடிக்கையாக, இந்திய விமானப்படை (IAF) பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமானத் தளங்களில் இருந்து அதன் சுகோய் Su-30MKI போர் விமானங்களைக் கொண்டு அந்த விமானத்தை பின்தொடர்ந்தன. விமானத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். விமானம் இப்போது சீனாவிற்கான அதன் விமானப் பாதையை தொடர்வதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது. 

நடந்தது என்ன?

ஈரானில் இருந்து புது டெல்லி வான்வெளியை நோக்கி சென்று கொண்டிருந்த வெளிநாட்டு விமானத்தை இடைமறிக்க இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் திடீரென தயார் நிலைக்கு கொண்டுவரப்பட்டன. ஈரானின் தெஹ்ரானில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்கு செல்லும் வழியில், வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, மஹான் ஏர், டெல்லியில் உடனடியாக தரையிறங்குவதற்கு டெல்லி விமான நிலைய ஏடிசியைத் தொடர்புகொண்டதாக ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் (ATC) கூறியது.  டெல்லி ஏடிசி விமானத்தை ஜெய்ப்பூருக்கு செல்ல பரிந்துரைத்தது. ஆனால் விமான பைலட் மறுத்து இந்திய வான்வெளியை விட்டு வெளியேறினார்.

IAF Su-30MKI ஜெட்ஸ் தயாராகின 

இந்திய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் எச்சரிக்கை விமானத்துடன் பகிரப்பட்டபோது, சீனாவுக்கு சென்றுகொண்ட்ரிருந்த வெளிநாட்டு விமானம் இந்திய வான்வெளிக்குள் நுழைந்திருந்தது. பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமான தளங்களில் இருந்து இந்திய விமானப்படையின் Su-30MKI போர் விமானங்கள் விமானத்தை இடைமறிக்க அனுப்பப்பட்டதாக வட்டாரங்கள் ANI இடம் தெரிவித்தன.

வெடிகுண்டு மிரட்டலின் தன்மை அல்லது ஈரானிய வணிக கேரியரின் பெயர் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை. இருப்பினும், அனுமதிக்குப் பிறகு, விமானம் இப்போது சீனாவை நோக்கி செல்வதாக கூறப்படுகின்ரது. இந்திய வான்வெளியில் இருக்கும்வரை அந்த விமானம் இந்திய பாதுகாப்பு நிறுவனங்களால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது. விமானம் சீனாவை நோக்கி தனது விமானப் பாதையில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

இது குறித்த மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.