மியான்மர் நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு மியான்மரின் லோய்காவிக்கு 3,500 அடி உயரத்தில் பறந்துக்கொண்டிருந்தது. அப்போது விமானம் தரையிறங்க வேண்டிய விமான நிலையத்திலிருந்து சுமார் 4 மைல் தொலைவில் விமானம் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஒரு பயணி துப்பாக்கி குண்டால் தாக்கப்பட்டார். விமானத்தில் பயணிகள் ஏறும்போது சோதனையிடப்பட்ட பின்பே அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களிடம் துப்பாக்க்கி எதுவும் இல்லை.
ஆனால் எப்படி துப்பாக்கியால் சுடப்பட்டார் என்பது பெரும் கேள்வியாக மாறியது. அதன் பிறகே அந்தக் குண்டு வெளியிலிருந்து வந்து தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலையம் அருகில் இந்தத் தாக்குதல் நடந்ததால், உடனே அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது.
தரையிலிருந்து சுடப்பட்ட துப்பாக்கியிலிருந்து தோட்டா வந்திருப்பது பாதுகாப்புப் படையினருக்கு தெரியவந்தது. மியான்மரில் கடந்த ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டு தற்போது ராணுவம் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக நாட்டில் அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த நாட்டு ராணுவம் சார்பில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. காரணம் எதுவாக இருந்தாலும் விமானத்தில் பயணித்தவர்மீது துப்பாக்கி குண்டு தாங்கிய சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் பீதியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.