புதுடெல்லி பிரகதி மைதானத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு: டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு

டெல்லி: புதுடெல்லி பிரகதி மைதானத்தில் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கான இரண்டு நாள் மாநாடு  நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், இம்மாநாட்டில் இன்று பங்கேற்று உரையாற்றினார். அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   
“கடந்த இரண்டு நாட்களாக தேசிய அளவிலான டிஜிட்டல் இந்தியா மாநில IT அமைச்சர்களுக்காண மாநாடு (Digital India State IT Ministers’ Conference) நடைபெற்றது. பல்வேறு தலைப்புகளில் பல்வேறு மாநிலங்கில் இருந்து வருகை புரிந்தவர்கள் இந்த Digital Initiatives பற்று பேசினார்கள்.

உண்மையிலே கடந்த ஓராண்டு காலத்தில் நம்முடைய முதல்வர் தலைமையில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புக்களை பலரும் பாராட்டினார்கள். ஏனென்றால் தமிழகத்தில் முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில் பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக “கடைசி மைல் இணைப்பு” (Last Mile Connectivity) என்று சொல்வோம் – அனைத்து கிராமங்களுக்கும் Internet சேவைகள் தடையின்றி கிடைப்பதற்கான முயற்சி தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் எடுக்கப்பட்டிருக்கறது.

அது போன்று எல்லா மக்களுக்கும் இணைய வழி (Online) வசதிகள் Onlineல் அரசினுடைய சேவைகளை பெறுகின்ற வசதி இ-சேவை மூலமும் ஒவ்வொரு அலுவலகத்திலும், சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்தையும் “மின் அலுவலகம்” (e-Office) மூலமாக இணைப்பது,  e-Office திட்டத்தினை மாநிலம் முழுவதும் நடைமுறை படுத்துவது, அதே போன்று தரவுகளின் அடிப்படையிலான அரசு தரவுகளை வைத்து திட்டங்கள் தீட்டுகின்ற திட்ட உதவிகள் (Welfare Assistance) கொடுக்கின்ற அந்த திட்டம் போன்றவை மிகுந்த வரவேற்பை இங்கு பெற்றிருக்கிறது.

இது போன்று தமிழகத்திலே தொழில்முனைவோர், புதுமையான முயற்சிகள் (Startups, Innovations), போன்றவற்றிற்கு அளித்து வரும் முக்கியத்துவமும் அங்கு இருக்கக்கூடிய நல்ல ஒரு சூழலை (Ecosystem) ஏற்படுத்துகிறது. இந்த மாநாடு மூலமாக பல்வேறு மாநிலங்களில் எப்படி IT துறை செயல்படுவது என்பதை நாங்கள் கவனமாக கவனிக்க முடிந்தது.
           
இன்னும் தீவிரமாக ஒரு புது உத்வேகத்தோடு நமது மாநிலத்தில் நல்ல முறையில் பணியாற்றி இந்த டிஜிட்டல் யுகத்தில் இந்த தொழில்நுட்பத்தின் பயன் சாதாரண மக்களுக்கு கூட கிடைக்கின்ற விதத்தில் நம்முடைய  அரசு பணிகளையும், அரசினுடைய செயலையும், அதிகமாக Digitalise பண்ணுகின்ற முயற்சியை நாம் மேற்கொள்வோம் என்று கூறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.
                    
கேள்வி: இந்த டிஜிட்டல் மூலமாக பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மீனவர்களுக்கு என்ன பயன் கிடைக்கும்? நேற்றைய தினம் நடைபெற்ற அந்த கண்காட்சியில் சிறப்பாக பார்த்த சிலவற்றை பற்றி கூற விரும்புகிறேன்.

நம் மீனவர்கள் காணாமல் போகின்ற நேரத்தில் அவர்களை கண்டுபிடிப்பது போன்ற வற்றில் மிகப் பெரிய சிக்கல் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது. அவற்றிற்கான தீர்வு காண சில தொழில்நுட்பங்களை நான் இங்கு பார்வையிட்டேன். உண்மையிலேயே சிறந்ததாக  இருக்கிறது அதை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்துவதற்கு அங்கு இருக்கக்கூடிய மாண்புமிகு மீன்வள துறை அமைச்சர் அவர்களோடு பேசி அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கலாம்.

இது போன்று மருத்துவ துறை (Health Sector) – இன்று மருத்துவ துறையில் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டிருக்கிறது. பல கண்டுபிடிப்புகள் மிக சிறப்பாக இருக்கிறது. இன்று ஆளில்லா விமான தொழில்நுட்பம் (Drone Technlogy), விவசாயம் போன்ற துறைகளில் பயன் படுத்துவதற்கான வாய்ப்பு,  அதே போன்று காவல் துறையில் Traffic Regulation (போக்குவரத்து ஒழுங்குபடுத்துவது)  போன்றவற்றுக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

தொழில் துறையில் இயந்திர மனித தொழில்நுட்பம் (Robotics) பயன்பாட்டில் அதிகம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு துறைகள் மூலமாக என்ன வாய்ப்புக்களை பயன் படுத்த முடியும் என்பதை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்துரைக்கின்றோம்.

அது மட்டும் அல்ல, இன்றைக்கு பல்வேறு நாடுகளில் இருக்கிற Best Practices அவற்றையெல்லாம் தமிழகத்திற்கு கொண்டு வந்து தமிழகத்தை டிஜிட்டல் சேவைகளில் முதல் வரிசையில் வைக்க வேண்டும் என்ற நம் தமிழக முதல்வரின் கனவுகளை இந்த துறை நிச்சயமாக  நினைவாக்கும்.” இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.