டெல்லி: பீகார், மராட்டியம், அரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்தேரி கிழக்கு (மராட்டியம்), மோகமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (அரியானா), முனுகோட் (தெலுங்கானா), கோலா கோக்ரநாத் (உ.பி.), தாம்நகர் (ஒடிசா), ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.