'நீ காணாமல் போய்டுவ'… ஆர்எஸ்எஸ்- ஐ சீண்டிய சீமான் – எச் ராஜா எச்சரிக்கை..!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்

கூறுகையில், சாதியும், மதமும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு இரண்டு கண்கள் மாதிரி. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கோட்பாடே இந்த இரண்டுதான். வெளிப்பாடுதான் இது. தேசிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமாக பள்ளி மாணவர்களிடம் தலைவர்களின் சாதி குறித்து கேள்வி கேட்கப்படுவது கண்டனத்துக்குரியது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என சீமான் ஆவேசமாக கூறினார்.

இதனை அடுத்து ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை வேறொரு தேதியில் நடத்த அனுமதித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், எந்த நோக்கத்துக்காக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்துகிறார்கள் என்பதை சொல்ல சொல்லுங்கள். ஏதாவது ஒரு மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்காக அந்த பேரணி நடத்தப்படுகிறதா? இப்படி எந்த நோக்கமும் இல்லாமல் 50 இடங்களில் எதற்காக பேரணி நடக்க வேண்டும்? ஒருவேளை ஆர்எஸ்எஸ் பேரணியில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு அசம்பாவிதங்கள் நடந்தால் அனுமதி வழங்கிய நீதிமன்றம் பொறுப்பு ஏற்குமா? என சீமான் இவ்வாறு பேசினார்.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது தீ வைத்து கொளுத்துவோம் என சீமான் பேசியதற்கு மட்டும் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சீமான் பேசிய வீடியோவுக்கு ட்வீட்டியுள்ள எச்.ராஜா ”நீ காணாமல் போய்விடுவாய்” என சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் பாணியில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பையொட்டி அமைதி பேரணியை நடத்த திருமாவளவனுடன் சேர்ந்து இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டிருந்தனர்.

இதனை சுட்டிக்காட்டிய தமிழக காவல்துறை சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக நீதிமன்றத்தை நாடி ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு வழங்கிய அனுமதியை திரும்பப்பெற வலியுறுத்தியது. ஆனால், நவம்பர் மாதம் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பை நடத்த அனுமதி வழங்கியது மட்டுமல்லாமல் அதற்கு காவகத்துறை தடையாக இருந்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

இதனால் நாம் தமிழர், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நேரம் வரும்போது கொளுத்தப்படும் என்று பேசிய சீமானை காணாமல் போய் விடுவாய் என்று எச். ராஜா மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.