சல்மான்கான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் ராம்சரண்
தெலுங்கில் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள காட்பாதர் படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக தனது படத்தில் சிரஞ் சீவியின் மகன் ராம்சரண் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் சல்மான்கான்.
இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய அடுத்த படமான கிசிகா பாய் கிசுகி ஜான் என்ற படத்தில் ராம்சரண் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று ராம் சரண் முதலில் சொன்னபோது இது ஒரு நகைச்சுவை என்றுதான் நினைத்தேன். ஆனால் மறுநாள் கேரவனுடன் வந்து படப்பிடிப்பிற்கு தயாராகி விட்டார். அவர் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ள சல்மான்கான், நானும் வெங்கடேஷ் டகுபதியும், ராம் சரணும் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடிப்பதால் இது எனக்கு சிறப்பான படம் என்றும் தெரிவித்திருக்கிறார் சல்மான் கான்.