வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் சிறைத்துறை டி.ஜி.பி. கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் நடந்துள்ளது. ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா, 57, நேற்று வீட்டில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.தகவலறிந்த உள்ளூர் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர்.
இது குறித்து கூடுல் டி.ஜி.பி. கூறுகையில், குடும் பிரச்னை காரணமாக அல்லது முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். முதற்கட்ட விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
கொலை செய்யப்பட்ட சிறைத்துறை டி.ஜி.பி. லோஹியா, 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார். இந்நிலையில் நேற்று மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூன்று நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் வந்துள்ள நிலையில் ஐ.பி.எஸ்.அதிகாரி கொலை சம்பவம் போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement