பின்னவல யானைகள் சரணாலயத்தில் அகற்றப்படும் கழிவுகளை பயன்படுத்தி பாரிய அளவிலான உயிர்வாய்Biogas வை தயாரிப்பதற்கு தேவையான சாத்தியக்கூறு அறிக்கையை தயாரிப்பதற்காக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவருமான ருவான் விஜேவர்தன பின்னவல யானைகள் சரணாலயத்திற்கு விஜயம் செய்தார்.
பின்னவல யானைகள் சரணாலயத்தில் நாளாந்தம் சுமார் 5 தொன் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றது. இதனைக்கொண்டு உயிர்வாயுவை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக தேவையான காலநிலை சௌபாக்கிய திட்டத்தை தயாரிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள CIimate Vulnerable forum (CVF) நிறுவனத்தின் பிரதிநிதிகள் சிலரும் அமைச்சருடன் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேயவர்தனவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கு அமைவாக பின்னவல யானைகள் சரணாலயம் ஆய்வு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.