அகமதாபாத்: பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானுடன் செல்பி எடுத்ததால் பாஜவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அகமதாபாத்தை சேர்ந்த பாஜ தலைவர் கிஷான்சின் சோலான்கி. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை பாஜவின் செய்தி தொடர்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கிஷான்சின் தனது பேஸ்புக் பக்கத்தில் பஞ்சாப் முதல்வரான ஆம் ஆத்மியை சேர்ந்த பக்வந்த் மானுடன் எடுத்துக்கொண்ட செல்பியை பதிவிட்டு, பிறந்த நாள் வாழ்த்துக்களுக்காக நன்றி ஜீ என குறிப்பிட்டு இருந்தார். இதன் எதிரொலியாக ‘கிஷன்சின் சோலான்கி கட்சிக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டதால் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநில பாஜ தெரிவித்து உள்ளது.