புதுடெல்லி: பீகார் உட்பட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் நவம்பவர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பீகார் மாநிலத்தின் மோகாமா மற்றும் கோபால்கஞ்ச், மகாராஷ்டிராவில் அந்தேரி, அரியானாவில் ஆதம்பூர், தெலங்கானாவில் முனுகோட், உத்தரப்பிரதேசத்தில் கோலா கோரக்நாத் மற்றும் ஒடிசாவில் தாம்நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன.
இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகின்ற நவம்பர் 3ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகின்ற 7ம் தேதி வெளியிடப்படும். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 6ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.