புதுடெல்லி: மிகவும் மலிவான விலையில் லாவா நிறுவனத்தின் பிளேஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 10 ஆயிரத்திற்கும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது பன்னாட்டு எலெக்ட்ரானிக்ஸ் கம்பெனியான லாவா இண்டர்நேஷனல். லாவா என்ற பெயரில் எலக்ட்ரானிக் சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மொபைல் போன், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் 2022 இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் பிளேஸ் 5ஜி என்ற போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த போன் அசப்பில் லாவா பிளேஸ் புரோ போல இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே மலிவு விலையில் கிடைக்கும் 5ஜி போனாகவும் இது இருக்கும் என தெரிகிறது. இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் இந்த போன் தீபாவளி பண்டிகை நேரத்தில் முன்பதிவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன இந்தியாவில் உருவாக்கப்பட்ட போன் என பிராண்ட் செய்யப்பட்டு வருகிறது.
சிறப்பு அம்சங்கள்
- 6.5 இன்ச் திரை அளவு.
- ஹெச்.டி+ டிஸ்பிளே.
- மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்.
- 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்.
- 5ஜி இணைப்பு வசதி.
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
- இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தலாம்.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது பிரதான கேமரா.
- முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
- 5000mAh பேட்டரி இடம் பெற்றுள்ளது.
Lava Blaze 5G Live Image Without Watermarks pic.twitter.com/b1QUAKQPgc
— SufiyanTechnology (@RealSufiyanKhan) October 3, 2022