ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளைத் தொலைதூர கல்விமுறை மூலமாகவோ, ஆன்லைன் முறையிலோ அல்லது பகுதிநேரமுறை மூலமாகவோ தொடரலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்தது.
இந்நிலையில் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்கும் திட்டமானது, பிஎச்டி மாணவர்களுக்கு பொருந்தாது என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
பிஎச்டி படிப்பை தேர்வு செய்த மாணவர்கள், அவர்கள் தேர்ந்தெடுத்த துறையில் தனித்துவமான அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்பதால் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.