திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தையொட்டி தினம் தோறும் காலை மற்றும் இரவில் பெரிய சேஷம், சின்ன சேஷம்,  சிங்கம், அண்ணப்பறவை, முத்து பந்தல்,  சர்வ பூபாலம்,  மோகினி அவதாரம் , கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை அலைபாயும் மனதை சிதரவிடாமல் கட்டுபடுத்தி சரிரம் என்னும் ரதத்தை நல் வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி் பூதேவி தயார்களுடன் பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று காலை 7 மணி முதல் 9.30 மணி வரை  மகாரதம் எனப்படும் தேரில் பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் முழுங்கியபடி வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ரத உற்சவத்தின் போது  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. சுவாமியின் ரதஉற்சவத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால் மறு ஜன்மம் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை. கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்வதற்காக பாயும் தங்க குதிரை மீது பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இரவு மலையப்ப சுவாமி கல்கி அலங்காரத்தில் இன்று இரவு 8 மணிக்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். நாளை காலை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.