இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங் தலமான பிளிப்கார்ட் தசரா விற்பனையை அக்டோபர் 5 முதல் தொடங்குகிறது. இந்த விற்பனை அக்டோபர் 8 வரை மட்டுமே இருக்கும்.
இதில் Flipkart Plus பயனாளராக இருந்தால் முன்கூட்டியே அக்டோபர் அன்றே தொடங்குகிறது. இதற்கான டீசரை பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில் சில எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பிரிண்டர், மானிட்டர், DSLR கேமரா, ஸ்மார்ட் வாட்ச் போன்றவற்றிற்கு கிடைக்கும். இதில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுபோன்ற மிகப்பெரிய தள்ளுபடி விலை கிடைக்கும்.
இந்த விற்பனையில் மீண்டும் ஐபோன் 13 விற்பனை செய்யப்படுமா என்பது தெரியவில்லை. இந்த ஐபோன் 13 ஏற்கனவே விற்பனை செய்யயப்பட்ட சமயம் 47 ஆயிரம் ரூபாயில், தொடங்கி படிப்படியாக அதிகரித்து 69,900 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த விற்பனையில் ஐபோன் 12 மற்றும் 13 ஆகிய போன்கள் விற்பனை செய்யப்படலாம். இதில் குறைந்த விலையில் கிடைப்பது மட்டுமல்லாமல் பழைய போன்களை மாற்றிக்கொண்டு புதிய போன்களை பெறவும் முடியும்.
சில TV மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு சுமார் 75% வரை தள்ளுபடி விலை அறிவிக்கப்படலாம். இந்த 4K Ultra HD TV விலை 17,249 ஆயிரம் ரூபாயில் விற்பனை செய்யப்படலாம்.
ஸ்மார்ட் TV பொறுத்தவரை 7,199 ஆயிரம் ரூபாயில் தொடங்கலாம். இதில் முக்கியமாக HDFC கார்டு வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 10% சலுகை மற்றும் தள்ளுபடி கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்