புதுடெல்லி: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து சீனாவின் வாங்ஜு நகருக்கு மஹன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டது. இந்த விமானம் பாகிஸ்தான் வான்பரப்பு வழியாக இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்ப தாக ஈரான் அரசிடம் இருந்து இந்திய அரசிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் விமானப்படை தளங்களில் இருந்து சுகோய் ரக போர் விமானங்கள் விரைந்து சென்று ஈரான் பயணிகள் விமானத்துக்கு பாதுகாப்பு அளித்தன. ஜெய்ப்பூர், சண்டிகரில் ஈரான் விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் விமானிகள் தரப்பில் டெல்லியில் தரையிறக்க அனுமதி கேட்டனர். இதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனிடையே வெடிகுண்டு மிரட்டல், புரளி என்பது தெரிய வந்தது. அதன்பின், சீனாவின் குவாங்ஜோ விமான நிலையத்தில் ஈரான் விமானம் பத்திரமாக தரையிறங்கியது