சென்னை: தமிழ்நாட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் நடைபெறாத நிலையில், 95% பணிகள் முடிந்த இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். திரு ஜெ பி நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் MLA வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிக என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் டிவிட் பதிவிட்டுள்ளார்.
உயர் மருத்துவ சிகிச்சை வழங்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 1956ம் அண்டு தலைநகர் டெல்லியில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற உயர்தர சிகிச்சை வழங்கும் எய்ம்ஸ் மருத்துவமனைகளை தங்களது மாநிலங்களிலும் அமைக்க வேண்டும் என மாநில அரசுகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பல மாநிங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 2012ம் ஆண்டு ஜோத்பூர், புவனேஷ்வர், போபால், பாட்னா, ராய்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து, 2018ம் ஆண்டு நாக்பூர், மங்கல்கரியிலும், 2019ம் ஆண்டு அறிவித்தபடி, கோரக்பூரிலும், தெலுங்கானா, பதிண்டா, கல்யாணி, வி4யபுர், பிளாஸ்புர் ஆகிய இடங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், பீகார் மாநிலத்தின் தர்பங்கா, அரியானா மாநிலத்தில் உள்ள ரேவரி, ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் அஸ்வந்திபோரா, தமிழ்நாட்டின் மதுரை ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி பணிகள் தொய்வடைந்து உள்ளன. குறிப்பாக மதுரையில், எய்ம்ஸ்க்காக ஒதுக்கப்பட்டுள்ள இடம் கேட்பாறின்றி காலியாகவே உள்ளது.
இந்த நிலையில்தான் கடந்தவாரம் சிவகங்கை வந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, எய்ம்ஸ் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்து விட்டதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக எம்.பி.க்கள் சு.வெங்கடேசன் உள்பட பலர் அங்குசென்று போட்டோ எடுத்து, எய்ம்ஸ் எங்கே டிவிட் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
இதற்கு விளக்கம் அளித்த மத்தியஅமைச்சர் எல்.முருகன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஆரம்ப கட்டப்பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி நட்டா கூறியதாக தெரிவித்தார். மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு லோன் வாங்கு வதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது உள்ளிட்ட 95சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளதாகத்தான் ஜே.பி நட்டா தெரிவித்த தாகவும் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.
இநத் நிலையில், ஹிமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிளாஸ்புர் எய்ம்ஸ் பணிகள் முடிவடைந்த நிலையில்,வரும் 4ந்தேதி அதை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.
இதுகுறித்து, கம்யூனிஸ்டு எம்.பி. மதுரை சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ள டிவிட்டில், உண்மையாகவே 95% பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக் 5 ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர். அதே 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் இன்னும் பொட்டல்காடாகவே இருக்கிறது. அந்த பொட்டல்காட்டைக் காட்டி 95 சதவிகிதம் என்றால் என்ன? என்று பாடம் வேறு நடத்தப்படுகிறது.
திரு ஜெ பி நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் MLA வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை திரு. கே.அண்ணாமலை அறிக என தெரிவித்துள்ளார்.