உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு யு லலித் கொலிஜியம் அமைப்பின் மற்ற நீதிபதிகளுக்கு அனுப்பியுள்ளார். தலைமை நீதிபதி பரிந்துரைகளை கொலிஜியம் அமைப்பின் மற்ற நீதிபதிகளுக்கு அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.
உச்ச நீதிமன்றத்தின் மற்றும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிப்பது உச்சநீதிமன்ற கொலிஜியம் அமைப்பின் பரிந்துரை அடிப்படையாகும். இந்த அமைப்பில் தலைமை நீதிபதியும் அதற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளும் இடம் பிடிப்பார்கள். தற்பொழுது கொலிஜியம் அமைப்பில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான சந்திரசூட், எஸ் கே கவுல், நசீர், கே எம் ஜோசப் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள யு யு லலித் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரவிசங்கர் ஜா, பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கேரோல், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் குமார் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க தனது பரிந்துரைகளாக கொலிஜியம் அமைப்பின் மற்ற நீதிபதிகளுக்கு கடிதம் மூலம் வழங்கியுள்ளார். தலைமை நீதிபதி இவ்வாறு பெயர்களை பரிந்துரைப்பது என்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM