வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டோருக்கான அறிவிப்பு நேற்று முன்தினம்(அக்.,2) துவங்கியது.
இதன்படி இந்த ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பிரான்சை சேர்ந்த அலைன் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஆண்டன் செலிங்கர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement