கொழும்பில் பதற்றம் : மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகைப்பிரயோகம் (Video)


அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

களனியில் இடம்பெற்றுவரும் போராட்டத்தை களைப்பதற்காகவே பொலிஸார் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தொழிற்சங்கத்தினர் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் இணைந்து இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியை இடைமறித்து களனி பல்கலைக்கழகத்திற்கு முன்னதாக இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துக்கு தடையாக செயற்பட்டமையினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு பேரணியை முன்னெடுத்தனர்.

” ஒடுக்கு முறையை நிறுத்து” ,” சிறைப்பிடித்தாலும் நாங்கள் வருகை தருவோம்”, ” துப்பாக்கி பிரயோகம் செய்தாலும் நாம் வருவோம் ”,” வீதிக்கு இறங்க நாம் அச்சம் கொள்ள மாட்டோம் ”

இவ்வாறான கோசங்களுடன் ஆர்பாட்டப் பேரணி நகர்ந்துச் செல்கையில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுகின்றது. 

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.